சாந்தி தரும் நெல்லை காந்திமதி
சில திசை புத்திகள் நடைபெறும் காலங்களில் மன அமையின்மையும் மனகலக்கமும் ஏற்படுவது இயல்பானது இவ்வாறான குழ்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்று சிவனை வழிபட்டு பின்பு காந்தி மதியம்மனை வழிபட்டால் மன அமைதி ஏற்படும் இவ்வாலத்தின் தல விருச்சம் மூங்கில் மரம் எனவே புனர்பூசம் நட்சத்திரத்தின் மரம் மூங்கில் மரமாகும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலத்திற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு, தரணி புகழும், தாமிர சபை இங்குதான் உள்ளது .மாதந்திர திங்கள்கிழமை வழிபாடு மனத்திற்கு மகிமையும் மகிழ்ச்சியும் அமைதியும் ஆனந்தத்தை நல்கும்.
