சுகம் நல்கும் சூரிய வழிபாடு
ஆதிதெய்வம் ஆதித்தன் . பிரபஞ்சத்தின் பிதா மகன் நவகிரகங்களின் நாயகன் உலக உயிர்களின் ஒட்டு மொத்த உறைவிடம். அவனின்றி அனைத்து செயல்களும் இல்லை அனுவும் அகிலமும் அவனே சனாதன தர்மத்தின் நெறிகாட்டுதலில் சூரிய வழிபாடு பிரதானமாகும். சூரிய பகவானை தினமும் வழிபட்டு வருவதால் ஏற்படும் பயன் நன்நடத்தை நற்சிந்தனை நல்ல செயல்கள் சத்தியத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் நல்வாழ்வு கை உடும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான ஆதிதிய கிருதயத்தில் உள்ள கீழ் காணம் மந்திர வரிகளை தினமும் காலையில் சொல்வது நலம் நவகிரகங்களின் நல்லருள் கிட்டும் .
ஆதித்யஹ்ருதயம்
ஆதித்யஹ்ருதயம் புண்யம்
ஸர்வ சத்ரு விநாசநம் |
ஜயாவஹம் ஜபேந்நித்யம்
அக்ஷய்யம் பரமம் சிவம் ||
ஸர்வமங்கள மாங்கல்யம்
ஸர்வபாப ப்ரணாசநம் I
சிந்தாசோக ப்ரசமநம்
ஆயுர்வர்தநமுத்தமம் II
