எளிய முறையில் லட்சுமி பூஜை

KAILASARAJAN M.A (astro)
0

              எளிய முறையில் லட்சுமி பூஜை


பௌர்ணமி அன்று  அல்லது மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு வெள்ளிகிழமை அன்று மாலை வேளையில் திருவிளக்கு முன் ஒரு லட்சுமி படத்தை  வைத்து  அதற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தில்   ஒன்பது மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி மற்றொரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம், வாழைபழம் வைத்து படைத்து மணமிகுந்த மலர் கொண்டு அர்ச்சனைசெய்து லட்சுமி போற்றியை சொல்லி பால் பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் நெய் வேத்தியம்' வைத்து வழிபடுவது நலம். இந்த வழிபாட்டினை தொடர்ந்துசெய்வதால் மங்கள நிகழ்வுகள், வளமை, பெருமை ,இனிமை, வாழ்வில் தேடி வரும்.   வாழ்வில் ஏழ்மையும், வறுமையும் ,மனிதவாழ்விற்கு பெரும் தடையாகும் . குறிப்பாக அடிப்படை தேவையான உணவு,  உடை, உறைவிடம் இவற்றை பெருவதில் யாருக்கும் தடை வரக்கூடாது என்பது சான்றோர்களின் விருப்பம்'.


      

                                    ஸ்ரீலட்சுமி போற்றி


ஓம் மங்களம் தரும் தேவியே போற்றி 

ஓம் மகா லெட்சுமி அன்னையே போற்றி

ஓம் மகாராணியே போற்றி

ஓம் மணி மகுட மானவளே போற்றி

ஓம் தனலெட்சுமியே போற்றி

ஓம் தாமரை செல்வியே போற்றி

ஓம் தங்க நிறத்தவளே போற்றி 

ஓம் தமிழாய் இருப்பவளே போற்றி

ஓம் தானிய லெட்சுமியே போற்றி 

ஓம் தைரிய லெட்சுமியே போற்றி 

ஓம் விஜய லெட்சுமியே போற்றி

ஓம் வெற்றி லெட்சுமியே போற்றி

ஓம்  கஜலெட்சுமியே போற்றி

ஓம் காவிய லெட்சுமியே போற்றி

ஓம் கனக லெட்சுமி போற்றி  

ஓம் கற்பகலெட்சுமியே போற்றி

ஓம் வரலெட்சுமியே போற்றி

ஓம் வசந்தத்தை தருபவளே போற்றி

ஓம் வைபோக லெட்சுமியே போற்றி

ஓம் ஐஸ்வரிய லெட்சுமியே போற்றி

ஓம்  ஆனந்த லெட்சுமியே போற்றி

ஓம் அன்ன லெட்சுமியே போற்றி

ஓம் பாக்கிய லெட்சுமியே  போற்றி

 ஓம் நல் ஞானம் தருபவளே  போற்றி

           ஓம் நான்குவேதம் ஆனவளே போற்றி

ஓம் நன்மைகளை புரிபவளே போற்றி

          ஓம் நாராயணின் நாயகியே போற்றி

ஓம் நம்பிக்கை அளிப்பவளே போற்றி

          ஓம் முக்கனியாய் இருப்பவளே  போற்றி

ஓம் முன்னேற்றம் தருபவளே போற்றி

          ஓம் மூல தனமாக இருப்பவளே  போற்றி

         ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி.

        ஓம் அஷ்டலெட்சுமியே போற்றி

        ஓம் ஆதி லெட்சுமியே போற்றி

        ஓம் அகிலம் காப்பவளே  போற்றி

        ஓம் ஆணவம் அழிப்பவளே போற்றி

       ஓம் ஆதியும் அந்தமும் ஆனவளே போற்றி

       ஓம் அஷ்ட ஐஸ்வர்யங்கள் தருவவளே போற்றி

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About