குரு
(வியாழன் அருள் புரிக அகிலத்திற்கும்)
''கால நடையில்
சமூகம்
அறியாமையை
அணிகலனாகவும்
ஆணவத்தை
ஆயுதமாகவும்
மடமையை நிரந்தர
மகுடமாகவும் கொண்டு
ஆறறிவை அறியாது அடர்ந்த இருட்டில்
ஆழமாக அமிழ்ந்த போது மானுடத்தை மேன்மை செய்ய
வேத வியாசராகவும்
பூகோள அறிவை
போதித்த புத்தனாகவும்
வாழ்வியல் அறிவை
வழங்கிய வள்ளுவனாகவும் அன்பான அறிவை வளர்த்த
ஆழ்வார்களாகவும்
நற்பண்பை நாடிய நாயன்மார்களாகவும்
பூமியில் தோன்றிய
குருவே
புவனம் காத்தருள வேண்டுமே! வியாழனே வெற்றியின்
விலாசமே
அருள் புரிக அகிலத்திற்கும் ''
.png)