மங்களம் விரைவில்

KAILASARAJAN M.A (astro)
0




                 மங்களம்  விரைவில்

                         குரு ஜாதகத்தில் கோச்சார ரீதியாக ராசிக்கு 5, 9, 2,7,11 இடங்களுக்கு வந்தும் சில பெண்களுக்கு திருமண தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் அந்த ஜாதகர்கள்

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த ஆண்டான் நாச்சியார் திருமொழிய (ஆறாம் திருமொழி)

            மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு முன் ஒன்பது  நெய் தீபங்கள் ஏற்றி அதன்அருகில் ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ,குங்குமம் ,வாழைபழம் வைத்து பூஜை செய்து  11  பாடல் களையும்தெய்வீக நம்பிக்கையுடன் படித்தால் திருமணம் விரைவில்நடைபெறும்ஏற்றமிகு தமிழில்எல்லோரும் நல வாழ இதோ இனிய பாடல்கள்எழில் கொஞ்சும் மொழில் 

                        


  ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த வாரணமாயிரம்

     

   வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

   நாரணன் நம்பி நடக்கின்றான் என்எதிர்

   பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

  தோரணம் நாட்டக் கனா கண்டேன் தோழி! நான்.          -1

  

  நாளை வதுவை மணமென்று நாளிட்டுப்

  பாளைக் கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

 கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்

 காளைப் புகுதக் கனாகண்டேன் தோழி! நான்.                -2


இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் 

வந்திருந்து எனை மகள்பேசி மந்திரித்து 

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை 

அந்தரி சூட்டக் கனா கண்டேன் தோழி! நான்.                    -3


நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி 

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி 

பூப்புனைக் கண்ணிப் புனிதனோடு என்தன்னை 

காப்பு நாண் கட்டக் கனாகண்டேன் தோழி! நான்.              -4


கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி 

சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள 

மதுரையார் மன்னன் அடிநிலைத் தொட்டெங்கும் 

அதிரப் புகுதக் கனாகண்டேன் தோழி! நான்.                        -5


மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத 

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் 

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை 

கைத்தலம் பற்றக் கனா கண்டேன் தோழி! நான்.                -6


வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் 

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து 

காய்சின மாகளிறு அன்னான் என் கைபற்றி 

தீவலம் செய்யக் கனாகண்டேன் தோழி! நான்.                    -7


இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் 

நம்மையுடையவன் நாராயணன் நம்பி 

செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி 

அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழி! நான்.                      -8


வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு 

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி 

அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்து 

பொரிமுகம் தட்ட கனா கண்டேன் தோழி! நான்.                -9


குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து 

மங்கல வீதி வலம் செய்து மணநீர் 

அங்கவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்

 மஞ்சன மாட்டக் கனா கண்டேன் தோழி! நான்.                 -10


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை 

வேயர் புகழ் வில்லி புத்தூர்கோன் கோதை சொல் 

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் 

வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!                           -11


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About